கவிதைத் துளிகள்

பகலில் நட்சத்திரங்கள்


மறைப்பது

இருள் மட்டுமல்ல

ஒளியும்தான்


ஆத்திகமும் நாத்திகமும்


இங்கே

கற்கள் ஒன்றுதான்

உருவங்கள் மட்டும்

வெவ்வேறாக

 

விரலைக் கிள்ளும் நகம்


சுப்ரிமணிய செட்டியார்

நகரில் கோவிந்தசாமி முதலியார்

தெருவில்

ராமசாமி நாயக்கர்

சந்தில்

குப்புசாமி ஆசாரி


திட்டம்


இங்கே புல்லுக்குப்

போய்ச் சேர

வேண்டுமென்பதற்காகவே

நெல்லுக்கு

நீர் திறந்துவிடப்படுகிறது.

 

விரதம்


உனக்குத் தெரியாது;

நான்

உளிகளை

பொறுத்துக்கொள்வதெல்லாம்

சிற்பமாவதற்கு

என்பது.

 
Incredible India


Get the Flash Player to see this player.

time2online Extensions: Simple Video Flash Player Module
Who's Online
We have 23 guests online

Iraianbu © 2011

All Rights Reserved
Webdesign

Purple Rain Media Solutions