வாய்க்கால் மீன்கள்

முதல் பதிப்பு – ஜனவரி 1995

பதிப்பகம்: நியூ செஞ்சுரி புக் ஹவுஸ் (பி) லிட்

 

கவிஞர் இறையன்பு இந்திய ஆட்சித்துறை அதிகாரி. மனித நேயமிக்க தனது கருத்து நேர்மைக்குக் கவிதையை நல்ல ஊடகமாகப் பயன்படுத்தியிருக்கிறார். கவிதை என்பது போதை தரும் சொற்களில் இல்லை. வெறும் ஓசைகளின் ஒழுங்கமைப்பில் இல்லை. இது தன்னைச் சுற்றியுள்ள உலகின் சமுதாய அசைவுகளை கவிஞன் எப்படி நுட்பமாகக் கவனிக்கிறான் என்ற பார்வையில் தான் இருக்கிறது என்பதை நன்றாகவே புரிந்து வைத்திருக்கிறார். இவருடைய படைப்புகளும், கவிதை உலகின் ஆரோக்கியமான நடவடிக்கைகளுக்கும் கட்டாயம் பயன்படும் என்று நம்பலாம். இவரது இரண்டாவது கவிதைத் தொகுப்பான “வாய்க்கால் மீன்கள்” இதனை உறுதி செய்கிறது.

 

சென்றைய எட்டாம் உலகத்தமிழ் மாநாட்டின் சிறப்பு அலுவலராகப் பணியாற்றியபோது எழுதிய நீளக்கவிதை. சனி, ஞாயிறு இரண்டு நாட்கள் மட்டுமே இதை எழுதியதற்கு நான் எடுத்துக் கொண்ட நேரம். நிறைய உவமைகளுடன் எழுதப்பட்டிருந்த அந்த காதல் கவிதை முரண்சுவை உள்ளதாகக் கருதப்பட்டது. தமிழக அரசின் 1995 ஆம் ஆண்டிற்கான சிறந்த கவிதை நூலுக்காக எனக்கு முதல் பரிசை வழங்கியது. இந்த நூலில் துயர முடிவை ஏற்றுக்கொள்ளாத பலர் மகிழ்ச்சியான உச்சகட்டத்துடன் ஒரு நூலைப் படைக்கவேண்டும் என்று கேட்டுக்கொண்டதன் அடிப்படையில் வைகை மீன்கள் என்கிற நீளக்கவிதையை பின்னர் எழுதினேன்.

இறையன்பு 


CANAL FISH


First Edition December 2006

Publishers: New Century Book House

 

What is the thing called love. This long-poem is one of the explorations. The other and reverential dimension. And the quest shall persist. Love has enthralled us in the metaphysical orgasms as when one feels the elation of surpassing the bourns of belief and expectation.

It remains in its own in entirety, its own.

And there are so much more original and great beyond the Anglophonic writing. This translation might help to put the reader in that perspective. Readers trust. Great things are created very where. Reorganise and recognise.

 


அரிதாரம்

முதல் பதிப்பு – ஜூன் 2005

பதிப்பகம்: நியூ செஞ்சுரி புக் ஹவுஸ் (பி) லிட்

 

ஒரு கவிஞன் கதை எழுதினால் அவன் சமைக்கும் படைப்பின் ருசி எப்படி தனிச்சுவையைத் தோற்றுவிக்கும் என்பதற்கு இந்நூல் ஒரு சான்று.

பத்தொன்பது சிறுகதைகளும் ரகசியமாய் வந்து மனதில் இடம்பிடித்தது, மொத்தமாய் சிறப்புத்தன்மை பெற்றாலும்; ஒரு சில கதைகள் இங்கே சுட்டிக்காட்டாமல் இருக்க முடியவில்லை.

‘தலைமாணாக்கன்’ ஒரு குருவிற்கும், சிஷ்யனுக்கும் உள்ள பற்று என்ன என்பதை சிஷ்யன் தன் கை கட்டை விரலை குருவிற்கு காணிக்கையாய் அளிக்கும் விசித்திரம், உலகிற்கு கூறும் நற்சிந்தனையாகவே படுகிறது.

‘மாயைகள்’ ரயில் வண்டியில் செல்லும்போது ஏற்படும் அனுபவங்கள், கண்முன் நேரடிக் காட்சிகளாகவே பதிவாகி விரிகிறது.

‘மயானம்’ ஒரு பெரியவரின் கேள்விகளால் ஏற்பட்டது என்ன? நெஞ்சை நெக்குருக வைக்கின்றது.

 

கவிதை என்கிற எல்லையோடு நிறுத்திக்கொள்ளாமல் அடுத்த தளத்திறகு பயணம் செய்ய வேண்டும் என்கிற ஆவலில் தாமரை, கணையாழி, புதிய பார்வை, தமிழன் எக்ஸ்பிரஸ் போன்ற இதழ்களில் சிறுகதைகளை எழுதத் தொடங்கினேன். ஏகலைவன் மீது அநியாயமான வன்முறை தொடுக்கப்பட்டதாக எனக்கு ஏற்பட்ட உணர்வு ‘தலை மாணாக்கன்’ என்கிற கதையை எழுதத் தூண்டியது. சுயம் என்பது அச்ச உணர்வு குறித்து ஏற்பட்ட விசாரணை. தில்லியில் இருந்து சென்னை வருகையில் நடந்த ஒரு நிகழ்ச்சி ‘மாயைகள்’ என்கிற கதை வடிவமைக்க உதவியது.

இறையன்பு

 


ஐ.ஏ.எஸ் தேர்வும் அணுகுமுறையும்

முதல் பதிப்பு – டிபம்பர் 2004

பதிப்பகம்: நியூ செஞ்சுரி புக் ஹவுஸ் (பி) லிட்

 

நூறு கோடிக்கும் மேலாக மக்கள் தொகை உடையது நம் நாடு. இனங்கள், சாதிகள், மதங்கள் எனப் பல்வேறாகப் பிரிந்து கிடக்கும் நம் நாட்டில் நிர்வாகச் சேவை மக்களுக்கான முன்னேற்றத்திற்காக, நலவாழ்விற்காக இயங்குதல் வேண்டும். அப்போதுதான் மக்களுக்கு நற்பலன்கள் கிட்டும். இதனை நோக்கமாகக் கொண்டவைதான் ஒதுக்கீடுகள். ஒதுக்கீடு இல்லையென்றால் பாமரர் இடம் பெற முடியாது; சமத்துவம் கானல் நீராகும். இதனை உள்ளத்தில்கொணடு எல்லாரும் I.A.S. தேர்வு எழுத வேண்டும். மக்கள் பயன் அடையவேண்டும் என்ற நோக்கத்தில் ஐ.ஏ.எஸ். தேர்வும் அணுகுமுறையும்என்னும் நூலை வெ.இறையன்பு எழுதியுள்ளார்கள். நாட்டின் திறைமையான நிர்வாகி, தமிழறிஞர், எல்லாரும் போற்றத்தக்க தகைமையாளர், எளிய தமிழில் தேர்வுக்கு எப்படி, எப்பொழுது ஆயத்தம் செய்ய வேண்டும், எதை எதைப் படிக்க வேண்டும், எவ்வளவு படிக்க வேண்டும், எப்படித் திட்டமிட வேண்டும் என அருமையாக இந்நூலில் கூறியுள்ளார்.

 

தமிழகத்தில் அதிக அளவில் மாணவர்கள் குடியுரிமைப் பணிக்கு தேர்வாக வேண்டும் என்கிற ஆவலில் எழுதப்பட்ட நூல். பதினாறு வாரங்கள் இதயம் பேசுகிறது இதழில் தொடராக வந்தபோதே பல மாணவர்களால் சேகரித்து வைக்கப்பட்ட கட்டுரைத் தொடர். முயற்சியும் பயிற்சியும் இருந்தால் இந்தத் தேர்வில் எளிதில் வெற்றிபெற முடியும் என்கிற நம்பிக்கையை கிராமப்புற மாணவர்களுக்கும் ஏற்படுத்தியது. இது வந்த பிறகு இதை அடியொற்றி இதிலிருக்கும் சரக்கை ஓசைபடாமல் உருவி பல புத்தகங்கள் வெளிவந்தன. ஒரு லட்சத்திற்கும் மேல் இந்த நூல் விற்பனையானது. இன்றும் தேர்வைப் பற்றி ஒரு பருந்துப்பார்வையை ஏற்படுத்தத் தக்க நூல். பாரத வங்கியின் பரிசு பெற்ற நூல்.

இறையன்பு


 


சின்னச் சின்ன வெளிச்சங்கள்


முதல் பதிப்பு – ஜூன் 2008

பதிப்பகம்: நியூ செஞ்சுரி புக் ஹவுஸ் (பி) லிட்

 

நூலாசிரியர் திரு. இறையன்பு அவர்களின் எழுத்து ஓர் எதிர்காலத்தின் உச்சியைத் தொட்டுவிட்டுத் திரும்பும்போது அது இளைஞர்களின் தொலைநோக்குப் பார்வைக்கு கிடைத்த அடித்தளம் என்றே கூறலாம். அதன்படி சின்ன சின்னச் சிந்தனைகள் தத்துவார்த்தங்களாய் இந்நூலெங்கும் விளைந்து கிடப்பதைக் காணமுடிகின்றது. சிறுவர் - பெரியவர் வாழ்வில் படித்துப் புரிந்துகொள்ளும் வகையில் அவருக்கே உரிய பாணியில் அழகான சொற்சித்திரமாய் வடித்துத் தந்துள்ளார்.

சில கதைகள் – அணைந்துகிடக்கும் வாழ்க்கைக்கும் விளக்கேற்றி வைத்துவிட்டுச் செல்கிறது. சில கதைகள் நறுமணமாய் சுவாசத்தரையைத் தொட்டுவிட்டுச் செல்கிறது. இத்தகைய அரிய நூல் பொதுவாக எல்லார் கையிலும் வழிகாட்டியாய் இருந்து உதவும் என்பதில் சிறிதும் சந்தேகமில்லை.

 

இந்திய மரபு உருவகக் கதைகளையும் குறுங்கதைகளையும் தன்னுள் அடக்கியது. மிகப்பெரிய தத்துவத்தை உருவகக் கதையாக வெளிப்படுத்தும்போது ஏற்படுகிற புரிதல்  ஆழமானதாக அமைய வாய்ப்புகள் அதிகம். இந்தக் காலத்திற்குத் தகுந்தது போல் படைக்கப்பட்ட உருவகக் கதைகள் ‘சின்னச் சின்ன வெளிச்சங்கள்’ நூலாகத் தொகுக்கப்பட்டது. தொலைக்காட்சி நிகழ்ச்சியில் செருப்பு தைப்பவர்கள் பற்றி சொன்ன உருவகக் கதையைப் பாராட்டி அத்தொழிலைச் செய்கிற தோழர் ஒருவர் எழுதிய கடிதமே இந்த நூலிற்கு அணிந்துரையாகக்  கொள்ளப்பட்டது. பலருடைய சொற்பொழிவுகளில் இக்கதைகள் எடுத்துக்காட்டாக கையாளப்படுவது உண்டு.

இறையன்பு

 


ஆத்தங்கரை ஓரம்

முதல் பதிப்பு: டிசம்பர் 2004

பதிப்பகம்: நியூ செஞ்சுரி புக் ஹவுஸ் (பி) லிட்

 

அந்தக் காலத்தில் உயிர்களைக் காப்பது கடவுள் என்று கூறி, கோயில் கட்டுவதற்குக் கூடக் கர்ப்பிணிப் பெண்களையே பலியிட்டதாக வரலாறு கூறுகிறது. அணை கட்டுவதற்கும் அதே மனிதப் பலி நடத்திக் காட்டப்படுகிறது. மனிதர்கள் மனிதர்களாக இல்லை என்பதும் அரசு அதிகாரிகள் பலர் அன்புடையவர்களாக இல்லை என்பதும் இந்நாவலில் குத்திக்காட்டப்படுகிறது.

அணை கட்ட ஆரம்பிக்கப்பட்ட சில நாட்களிலேயே பல கிராமங்கள் நீரில் மூழ்கும் நிலை நேர்ந்தது. அணைக்கு எதிராக அரசாங்க அனுதாபமோ, எதிர்க்கட்சிகளின் அனுதாபமோ எழவில்லை.

பழங்குடியினரைப் பொறுத்தவரை பணம் என்பது வெறும் காகிதமாகத்தான் தெரிந்தது. அவற்றையெல்லாம் வெள்ளம் இழுத்துக்கொண்டு போய்விட்டது. வெள்ள நிவாரணப் பணிக்கு அரசு முன்வந்தது. வெள்ளச் சேதம் பற்றிய விளக்கம் கேட்ட அரசு அதிகாரிகளிடம் எதுவும் சொல்ல மறுத்து உதவியை ஒட்டுமொத்தமாக ஏற்க மறுத்தனர். அணை கட்டுவதற்கு ஆணித்தரமான எதிர்ப்பையே தெரிவித்தனர்.

‘ஆத்தங்கரை ஓரம்’ நாவலைப் படிக்கும் பட்டணத்துவாசிகள் கூட ஆற்றங்கரை கிராமத்தில் குடியிருந்த உணர்வைப் பெறும் அளவில் கதை படைக்கப்பட்டுள்ளது. சிந்தூர் கிராமத்தை ஆற்றுவெள்ளம் இழுத்துச் சென்றது. ‘ஆத்தங்கரை ஓரம்’ நாவல் வரிகள் வாசகர்களின் சிந்தனையை இழுத்துச் சென்று கதை முடிவில் நிறுத்துகிறது. இந்நாவலில் வருகின்ற பாத்திரங்கள் ஒவ்வொன்றும் பிசிறில்லாமல் வார்க்கப்பட்டுள்ளன என்று படைப்புலகச் சாதனையாளர் த. ஜெயகாந்தன் அணிந்துரையில் கூறுகிறார்.

 

பயிற்சி பெற்ற போது நர்மதை நதிக்கரையில் புதிதாகக் கட்டப்பட்ட அணை பற்றி ஆய்வுசெய்ய சென்றபோது ஏற்பட்ட தாக்கங்களை மையமாக வைத்து இதயம் பேசுகிறது இதழில் வெளிவந்த தொடர் பின்னர் ஆத்தங்கரை ஒரம் என்கிற நாவலாக வடிவம் பெற்றது. புதிய அணைக்கட்டுகள் கட்டப்படுவது குறித்து நிகழக்கூடிய சுற்றுச்சூழல் பிரச்சனைகள் முன்வைக்கப்பட்டன. அந்த நூல் திருப்பூர் தமிழ்ச்சங்கத்தின் பரிசு பெற்ற நாவல். இந்நூல் குறித்து பல கல்வி நிறுவனங்களில் கருத்தரங்குகள் நடத்தப்பட்டன. அணை தேவையா இல்லையா என்பதிலிருந்து பழங்குடியினருடைய வாழ்வாதார முறை வரை வாசிப்பவர் மனதில் ஆழமாக எழுப்பியது இந்த நூல்.

இறையன்பு

 


ஏழாவது அறிவு (முதல் பாகம்)


ஐந்தாம் பதிப்பு – நவம்பர் 2007

பதிப்பகம்: பதிப்பகம்: நியூ செஞ்சுரி புக் ஹவுஸ் (பி) லிட்

 

நூலாசிரியர் இறையன்பு அவர்கள் ஏழாவது அறிவுக்கு “மனம் என்பது சிந்தனைகளின் தொகுப்பு. சிந்தனைகளின் மூலம் சிந்தனைகளைக் கடக்கக் கற்றுக் கொள்வதற்கு ஆறாவது அறிவில்தான் சாத்தியம். ஆறாவது அறிவையும் தாண்டி சிந்தனைகளற்ற நிலைக்குச் செல்லவேண்டும். அது ஏழாவது அறிவாக உதயமாகிறது. ஏழாவது அறிவு என்பது அறிவு அல்ல அனுபவம். அப்போது இறைமையோடு இயைகிற அனுபவம் ஏற்படுகிறது” என்று விளக்கம் தருகிறார்.

இந்நூலைப் படிப்பவர்கள் தங்கள் எண்ணங்களைத் தூண்களாக நிலைநிறுத்தி வெற்றி என்னும் கோபுரம் எழுப்புவது உறுதி.

வானொலியில் தொடராக வந்த சொற்பொழிவுகளின் தொகுப்பு. ஆறாவது அறிவு புலன்களைக் கட்டுப்படுத்த உதவுகிறது. ஏழாவது அறிவு புலன்களைக் கடக்க உதவுகிறது என்கிற அடிப்படையில் இத்தலைப்பு சூட்டப்பட்டது. இரண்டாவது, மூன்றாவது அறிவையே தாண்டாமல் அது தொடர்புடைய புலனிலேயே தேங்கிவிடுபவர்கள் இருக்கத்தான் செய்கிறார்கள். இரண்டாயிரம் ஆண்டு புத்தகத் திருவிழாவின் போது வெளியிடப்பட்ட இந்நூல் அந்த புத்தகச் சந்தையிலேயே முதல் பிரதி முழுவது விற்றுத் தீர்ந்தது என்பது சின்ன கட்டுரைகளின் மீது வாசகர்களுக்கு இருக்கும் சிநேகத்தை வெளிப்படுத்துவதாக இருந்தது. இந்நூல் பாரத வங்கியின் சிறந்த கட்டுரைத் தொகுப்பிற்கான பரிசு பெற்றது.

இறையன்பு

 


ஏழாவது அறிவு (இரண்டாம் பாகம்)

முதல் பதிப்பு: ஜூலை 2005

பதிப்பகம்: நியூ செஞ்சுரி புக் ஹவுஸ் (பி) லிட்

 

நாம் துயரத்தைத் திசைதிருப்ப நினைக்கும்போதெல்லாம் அது அதிகரிக்கவே செய்கிறது. துன்பத்தைத் தாண்டி மேலே செல்ல முற்படும்போது நமக்கான வழிகள் தென்படுகின்றன. பணி செய்யாமல் வெறும் உல்லாசத்தை மட்டும் அனுபவிக்கின்ற எல்லா வாழ்க்கையுமே நரக வாழ்க்கைதான். தீய வழிகளில் சத்தியத்தை நிலைநாட்ட முடியாது. குறுக்கு வழிகளில் இலட்சியத்தை அடையலாம் என்று நினைப்பது மதுவை அருந்தி உடல் வலியைப் போக்கிக் கொள்ளலாம் என்பதைப் போன்ற அறிவற்ற செயல். கரும்பாய் இருந்தால் நசுக்கப்படுவோம் என்பதால் எட்டிக்காயாய் யாரும் தீண்டத் தகாததாய் இருக்கக் கூடாது.

நாம் வாழ்ந்ததற்கு அடையாளமாக வேதனைகளை விட்டுச்செல்லாமல் சாதனைகளை விட்டுச்செல்ல வேண்டும். பணம் கிடைக்கிறது என்றால் நரகத்திலும் பேரம் பேசுவார்கள். சுயநலம் முதலில் முந்தவைக்கும். ஆனால் முடக்கிப் போட்டுவிடும். இதயத்தை இரும்பாக்கி இறுக்கமாக வாழாமல் கரும்பாக மாற்றித் தங்கயுகத்தை உருவாக்க வேண்டும். தன்னம்பிக்கையும் துணிவும் நேர்மையும் இருக்கும்போது வெளிப்படும் எண்ணங்களே உயர்வு தரும். ஆணையிடாமல் அடிபணிய வைப்பதே சிறந்த நிர்வாகம். பேதம் பார்க்காத நேசமே உயர்ந்தது. சொல்லில், செயலில் ஒருங்கிணைந்து தாழ்வு மனப்பான்மையிலிருந்து விடுபட வேண்டும். பொறுப்பானவர்களிடம் கோபம் நீண்ட நேரம் தங்கியிருந்தால் எடுக்கிற முடிவுகள் சிதறிப்போகும். நூல்கள் படிக்கும் பழக்கம் ஒருவனை முனை மழுங்காமல் கூர்மையாக்கும்.

மேற்கண்ட கருத்துகளை உள்ளடக்கி நகைச்சுவைச் சம்பவங்களைச் சேர்த்து நடைமுறை, வரலாறு, புராண நிகழ்ச்சிகளைச் சான்றுகாட்டி இந்நூல் வடிவமைக்கப் பட்டிருப்பது சிறப்புக்குரியது.

 

வானொலியில் தொடராக வந்த சொற்பொழிவுகளின் தொகுப்பு. ஆறாவது அறிவு புலன்களைக் கட்டுப்படுத்த உதவுகிறது என்கிற அடிப்படையில் இத்தலைப்பு சூட்டப்பட்டது. இரண்டாவது. மூன்றாவது அறிவையே தாண்டாமல் அது தொடர்புடைய புலனிலேயே தேங்கிவிடுபவர்கள் இருக்கத்தான் செய்கிறார்கள். இரண்டாயிரம் ஆண்டு புத்தகத் திருவிழாவின் போது வெளியிடப்பட்ட இந்நூல் அந்தப் புத்தகச் சந்தையிலேயே முதல் பிரதி முழுவதும் விற்றுத் தீர்ந்தது என்பது சின்னக் கட்டுரைகளின் மீது வாசகர்களுக்கு இருக்கும் சிநேகத்தை வெளிப்படுத்துவதாக இருந்தது. இந்நூல் பாரத வங்கியின் சிறந்த கட்டுரைத் தொகுப்பிற்கான பரிசு பெற்றது.

இறையன்பு

 


உள்ளொளிப் பயணம்

ஆறாம் பதிப்பு – ஜூன் 2005

பதிப்பகம்: நியூ செஞ்சுரி புக் ஹவுஸ் (பி) லிட்

 

காலத்திற்கும் தளத்திற்கும் உட்பட்ட சூரிய ஒளியும் சரி மின்னொளியும் சரி கண்ணில் புலனாகும். ஆனால் உள்ளொளி எந்தப் புலனுக்கும் உள்ளாகாது. அதனை அடையாளம் காட்டுகிறார் இந்தப் புத்தகத்தின் ஆசிரியர் இறையன்பு ஐ.ஏ.எஸ். அவர்கள். அதுதான் அக ஒளி. எளிமைப்படுத்திச் சொல்வதனால் சிந்தனை ஒளி என்று கூறலாம். மனிதனுக்கே உரிய ஒளி. இந்த உள்ளொளி, மனிதனின் நியாயமான மகிழ்ச்சிக்கு வழிகாட்ட முடியும் என்பதை ஆசிரியர் தனது எழுத்துக்களில் இழையோட விட்டுள்ளார்.

உள்ளொளியானது அறிவாகவும் அன்பாகவும் மனச்சாட்சியாகவும் கருணையாகவும் மன உறுதியாகவும் விழிப்புணர்வாகவும் இயற்கையின் மீதான காதலாகவும் ஜீவன்கள் மீதான நேசமாகவும் சுயமான சிந்தையாகவும் – இப்படி எண்ணற்ற உயர் பண்புகளாக மனிதனிடம் செயல்பட முடியும் என்பதை தெளிந்த ஓடை நீரோட்ட நடையில் தெளிவுப்படுத்துகிறார்.

 

இதுவும் வானொலிப் பேச்சுகளின் தொகுப்பு. ஏழாவது அறிவிலிருந்து மாறுபட்ட உரைநடையோடு உருவாக்கப்பட்டது. இந்நூலில் உள்ள கபீர் குறித்த சொற்பொழிவுத் தொடர் பலரின் கவனத்தை ஈர்த்தது. சொல் என்பது எவ்வளவு முக்கியம் என்பதை அப்பகுதி வளிக்கியது. சான்றாண்மையைப் பற்றி கொடுத்திருக்கும் விளக்கமும் பலருக்கு திருப்தியைத் தந்தது. ஏழாவது அறிவு போல சரளமாக இது வாசிக்க முடியவில்லையே என்று சொன்னவர்களும் உண்டு. இதில் ஆழம் அதிகம் என்று இதைப் பற்றிய விமர்சனங்களில் வாசகர்கள் தெரிவித்தனர்.

இறையன்பு 


படிப்பது சுகமே

முதல் பதிப்பு – டிசம்பர் 2004

பதிப்பகம்: நியூ செஞ்சுரி புக் ஹவுஸ் (பி) லிட்

 

எண்ணத்தில் தெளிவும் உறுதியும் இருப்பவர்கள் அதிக அடித்தல், திருத்தல் இல்லாமல் தங்கள் கருத்துகளை வெளிப்படுத்துவார்கள். கடைசி நேரத்தில் படிப்பது குழப்பத்தை விளைவிக்கும். நிச்சயம் வெற்றி பெறுவோம் என்று எண்ணித் தேர்வு எழுத வேண்டும். படிப்பது ஒரு நாளும் பாழாவதில்லை. நம்மை சுற்றியுள்ளவர்களின் உதடுகளில் புன்னகையைச் சேர்ப்பதே படிப்பின் முக்கிய நோக்கம்.

மேற்கண்ட கருத்துகளை நிகழ்வு எடுத்துக்காட்டுகளுடனும், கதை விளக்கங்களுடனும் இந்நூல் எடுத்துரைக்கிறது. உண்மையிலேயே இந்நூல் தேர்வுக்கான திறவுகோல்தான். இந்நூலைப் படிப்பவர்கள் வெற்றிப் படிக்கட்டுகளை அமைத்துக் கொள்வார்கள் என்பது உறுதி.

 

தேர்வை எப்படி அணுக வேண்டும் என்கிற யுத்தி கல்விக்கூடங்களில் சரியாகக் சொல்லித்தரப்படுவது இல்லை. படித்ததையெல்லாம் எழுதுகிற பயிற்சியாக தேர்வு கருதப்படுகிறதேயொழிய தேவையானவற்றை வெளிப்படுத்துகிற பரிசோதனைக்கூடமாக அதை மாணவர்கள் கருதுவதில்லை. இந்நிலையை மாற்ற பல்வேறு தேர்வுகள் குறித்தும் தேர்வுக்கு புத்தகங்கள் சேகரிப்பது, விடைகளைத் தயாரிப்பது, வினாத்தாள்களை எதிர்கொள்வது போன்ற பல முக்கியமான செய்திகளை முறையாக சொல்லித் தருகிற நூலாக இது உருவானது. பல பள்ளிகளிலும் தேர்வு பற்றி ஆற்றிய உரைகளுக்கு ஒரு வடிவம் தந்தபோது இந்த நூல் உருவானது. முனைவர் முருகேச பாண்டியன் இந்த நூல் மாணவர்கள் கட்டாயம் வைத்திருக்க வேண்டிய புத்தகம் என்று வலியுறுத்தியிருந்தார். ஒரு இலட்சத்திற்கும் மேற்பட்ட பிரதிகள் இதுவரை விற்றிருக்கிறது. மாணவர்களுக்கு இந்நூல் திருமண நிகழ்வின் போது பரிசாக வழங்கப்பட்டிருக்கின்றது.

இறையன்பு 


முகத்தில் தெளித்த சாரல்


முதல் பதிப்பு – டிசம்பர் 2005

பதிப்பகம்: நியூ செஞ்சுரி புக் ஹவுஸ் (பி) லிட்

 

அண்மையில் சாகித்ய அகாதமி நடத்திய கவிதைத் திருவிழாவில் கலந்துகொண்டபோது ஓர் அன்பர் இடைமறித்து நீங்கள் ஏன் இப்போது ஹைக்கூ எழுதுவதில்லை?... என்று கேட்டார்.

ஹைக்கூ பற்றி அதிகமாகப் புரிந்துவிட்டது... என்று பதில் சொன்னேன். அவருக்கு என் பதில் புரிந்ததா இல்லையா என்று தெரியவில்லை. ஆனால் நிஜம் அதுதான், ஹைகூ அத்தனை நுட்பமானது. எளிமையும் ஆழமும் இணைந்தது. அதனாலேயே ஹைகூவை உணர்வு இலக்கியம் என்று இறையன்பு எழுதும்போது சட்டென்று ஏற்றுக்கொள்ள முடிகிறது.

இதைச் சுலபமாக, ஆழ்ந்த கவனிப்புகளோடு இவரால் எழுத முடிந்ததற்குக் காரணம் படிப்பாற்றலும், வாழ்வனுபவமும்.

ஒரு பத்து நிமிட தொலைக்காட்சி பேச்சிற்கு எத்தனை புத்தகங்களைப் படித்துக் குறிப்பெடுக்கிறார் என்பதை ஒருமுறை நேரில் பார்த்தபோது எனக்கு மயக்கமே வந்துவிட்டது.

 

தேர்ந்தெடுக்கப்பட்டஹைக்கூ கவிதைகளின் பிரதிபலிப்புகளைத் தொகுத்து இந்நூல் உண்டாக்கப்பட்டது. வெட்டுப்பட்ட பிறகு சதுரங்கக் காய்கள் அனைத்தும் பெட்டிக்குள் சென்று சமமாகி விடுகின்ற நிகழ்வை ஜென் கவிதை ஒன்று குறிப்பிடுகிறது. துப்புரவு பற்றி தமிழ் ஹைக்கூ கூறுகிற நுட்பமும் இந்த நூலில் அலசப்பட்டிருக்கிறது. வாசிப்பதற்கு சரளமான இந்த நூல் ஹைக்கூ கவிதைகள் பற்றிய பரவலான புரிதலை ஏற்படுத்தியது.

இறையன்பு

 


SPRINKLE ON THE FACE


First Edition August 2007

Publishers: New Century Book House

 

In expounding the sharp Tamil haiku, Iraianbu says

There are animals

That eat one of their

Offspring to forego

Their bodily weakness

Although, the haiku above is so moving in baring a reality of the mother seeking to kill her babe with cactus milk and there is a mongrel that is feeding its puppies, the poet still bares the instincts of a dog ready to eat one the off-springs for its bodily weakness. Most poets would rather stop with what they have said as a poem. But to say that dog eats its youngling is scientific realism. A writer or a poet needs guts to expose such starker reality.


 


ஓடும் நதியின் ஓசை (முதல் பாகம்)

முதல் பதிப்பு: ஜூலை 2005

பதிப்பகம்: நியூ செஞ்சுரி புக் ஹவுஸ் (பி) லிட்

 

திரு. இறையன்பு அவர்களின் படைப்புகளில் எப்போதுமே ஒரு தனித்தன்மை உண்டு. அவரின் ஒரு நூலைப் படிப்பதென்பது உலகப் பொதுவிஷயங்களைத் தெரிந்துகொள்வதற்குச் சமம். அந்த வகையில் உள்ளே வரும் இருபத்தைந்து கட்டுரைகளும் ஒன்றன்பின் ஒன்றாக வந்து இதயத்தில் கையொப்பமிட்டுச் செல்வது வியக்க வைக்கிறது.

மனிதனின் முடிவுகள் எல்லாமே வெற்றியில்தான் முடியவேண்டும் என்ற நோக்கமாக இருக்கலாம். ஆனால் சூழ்நிலைகளின் அம்புகள் நல்லதுக்கும் – கெட்டதுக்குமே குறி பார்க்கின்றன. காலத்தின் திசைக்கேற்ப நடந்துகொண்டிருக்கும் மனிதர்கெல்லாம் இந்நூல் ஒரு பரீட்சையாக அமையும். தவிடுபொடியாகும் வாழ்வின் நெருக்கடிகளுக்குள் வீழ்ந்துகிடக்கும் ஏழையைக்கூட தட்டியெழுப்பும் சக்தி எழுத்திற்கும் உண்டு என்பதை இந்நூல் நிரூபித்துக் காட்டுகிறது.

 

தினத் தந்தி இளைஞர் மலரில் எழுதப்பட்ட ஐம்பது கட்டுரைகளில் முதல் இருபத்தைந்து தொகுக்கப்பட்ட நூல். அவர்களுக்கு அறிவுரை கூறுவது போல் அமையாமல் ஆற்றுப்படுத்துவது போல் எழுதப்பட்ட அனுபவங்களின் தொகுப்பு. எவ்வளவு வாரங்கள் வேண்டுமானாலும் எழுதுங்கள் என்று சுதந்திரம் கொடுக்கப்பட்டு ஒரு அச்சரத்தைக் கூட மாற்றாமல் நல்ல புகைப்படங்களுடன் தினத் தந்தி வெளியிட்டபோது பல திக்குகளிலிருந்து வரவேற்பைப் பெற்ற தொடராக இது திகழ்ந்தது. மாணவர்கள் எழுதிய கடிதங்கள் நேரடியாக அனுப்பப்பட்டு அவர்களுக்கு நானே பதில் அனுப்புகிற வாய்ப்பும் தினத் தந்தி வழங்கியது. தொடர்ந்து ஒரு செயலை செய்கிறபோது அது பரவலான வீச்சை ஏற்படுத்தும் என்பதை இத்தொடர் உணர்த்தியது. இளைஞர்களோடு சிநேகமாக அமர்ந்து பேசுவது போல் எழுதப்பட்ட நூல்

 

தினத் தந்தி இளைஞர் மலரில் எழுதப்பட்ட ஐம்பது கட்டுரைகளில் முதல் இருபத்தைந்து தொகுக்கப்பட்ட நூல். அவர்களுக்கு அறிவுரை கூறுவது போல் அமையாமல் ஆற்றுப்படுத்துவது போல் எழுதப்பட்ட அனுபவங்களின் தொகுப்பு. எவ்வளவு வாரங்கள் வேண்டுமானாலும் எழுதுங்கள் என்று சுதந்திரம் கொடுக்கப்பட்டு ஒரு அச்சரத்தைக் கூட மாற்றாமல் நல்ல புகைப்படங்களுடன் தினத் தந்தி வெளியிட்டபோது பல திக்குகளிலிருந்து வரவேற்பைப் பெற்ற தொடராக இது திகழ்ந்தது. மாணவர்கள் எழுதிய கடிதங்கள் நேரடியாக அனுப்பப்பட்டு அவர்களுக்கு நானே பதில் அனுப்புகிற வாய்ப்பும் தினத் தந்தி வழங்கியது. தொடர்ந்து ஒரு செயலை செய்கிறபோது அது பரவலான வீச்சை ஏற்படுத்தும் என்பதை இத்தொடர் உணர்த்தியது. இளைஞர்களோடு சிநேகமாக அமர்ந்து பேசுவது போல் எழுதப்பட்ட நூல்.

இறையன்பு

 


 

ஓடும் நதியின் ஓசை (இரண்டாம் பாகம்)

முதல் பதிப்பு: ஜூலை 2005

பதிப்பகம்: நியூ செஞ்சுரி புக் ஹவுஸ் (பி) லிட்

 

நதி கடலில் சங்கமமாகிவிடுகிறது ஆனால், அது, தான் புறப்பட்ட இடத்திலிருந்து சங்கமம் வரையான அதனுடைய பயணத்தில்தான் எத்தனையோ ஓசைகளை எழுப்புகிறது. அருவியோசைகளாகவும் – பாறையோசைகளாகவும் தெளிந்த நீரோட்ட ஓசைகளாகவும் – இப்படித் தனது பயணத்தின் பாதைகளுக்கு ஏற்றபடியெல்லாம் ஓசை எழுப்புகிறது. இதுதான் மனித வாழ்க்கையிலும் நிகழ்கிறது. மனிதனும் தனது சூழ்நிலைமைக்குட்பட்ட பிரச்சினைகளைச் சந்திக்கிறான். அந்தப் பிரச்சினைகளைத்தான் இந்தப் புத்தகத்தின் ஆசிரியர் அலசி ஆராய்கிறார்.

ஓடும் நதியின் ஓசை (இரண்டாம் பாகம்) என்னும் இந்தப் புத்தகத்தின் இறுதி வரிகளில் நதி, கடலில் விழுவதை அறிவிக்கும் ஆசிரியர்

“இது மரணம் அல்ல, சங்கமம்

இது இழப்பு அல்ல – காணல்

இது காணாமல் போதல் அல்ல – தேடல்”

என்று ஆணித்தரமாகக் கூறுகிறார். இது மனிதன் நம்பிக்கை ஏற்படுத்திக் கொள்ளவேண்டிய வார்த்தைகள் மட்டுமல்ல மனித வாழ்க்கைக்கே உள்ள அர்த்தத்தை உணர்த்தக்கூடியதாகும்.

 

இந்தத் தொகுப்பில் அனுபவங்களும், இலக்கியச் சாரங்களும் சம அளவில் பங்குபெறும் வகையில் கட்டுரைகள் அமைந்திருந்தன. முன்னேற்றம் என்பது வெளிநாட்டு நூல்களைப் பார்த்துக் கற்றுகொள்ளவேண்டிய செய்தியல்ல. நம் அருகில் இருப்பவர்களையே ஆழமாக உற்றுநோக்கிப் பலவற்றை கற்றுக்கொள்ள முடியும் என்பதை இத்தொகுப்பு சொல்லுகிறது. தன்னளவில் ஒவ்வொருவரும் சுய பரிட்சார்த்தம் செய்துகொண்டு சுடர்விட முடியும் என்பதற்கு இந்த நூல் அத்தாட்சி.

இறையன்பு

 

 


ஏழாவது அறிவு (மூன்றாம் பாகம்)

முதல் பதிப்பு: ஜூலை 2005

பதிப்பகம்: நியூ செஞ்சுரி புக் ஹவுஸ் (பி) லிட்

 

இறையன்பு ஐ.ஏ.எஸ் அவர்கள் தமிழுலகத்தில் தனியிடத்தைப் பிடித்து வாசகர் உள்ளங்களில் கருத்துவிதைகளை விதைத்து நல்ல எதிர்காலம் என்னும் அறுவடைக்கு வழிவகுத்து வருகிறார். பல அரிய படைப்புகளை ஆக்கித்தந்து எழுத்துலகில் தனி முத்திரை பதித்துக்கொண்டிருக்கிறார். படித்துச் சாதனைபுரிந்தவர் படைத்துச் சாதனைபுரிவது வாசகர்களுக்கு ஒரு வரப்பிரசாதம். ஏழாவது அறிவு (மூன்றாம் பாகம்) என்னும் இந்நூலில் ஏராளமான கருத்துகளை இலக்கியம் மற்றம் பல்துறைச் சான்றுகளுடன் எடுத்துக்காட்டி விளக்கியுள்ளார்.

 

ஒரு சொல்லைச் சொல்லும்போது எச்சரிக்கையாக இருக்கவேண்டும். எழுதும்போது இன்னும் உன்னிப்பாக இருக்கவேண்டும். பதற்றம் இருந்தால் மூளையின் செயல்பாடு பாதியாகக் குறைந்துவிடும். சகிப்புத் தன்மையால் விரோதம் வளராது. சகிப்புத்தன்மை என்றாலே விரோதத்தையோ அதிருப்தியையோ நாம் வெளியில் காட்டிக்கொள்ளாமல் இருப்பதுதான். கலைகளெல்லாம் மனிதனைப் பிணைக்கவும் இணைக்கவும்தான். பிளக்கவும் சிதைக்கவும் அல்ல. இலக்கியம் நேரடியாக முரசுகொட்டி முழங்குவதில்லை. அது மறைமுகமாக விழிப்புணர்வை ஏற்படுத்துகிறது என்று விளக்குவதுடன் ஈசாப்புக் கதைகள், பஞ்சதந்திரக் கதைகள், ஹிதோபதேச கதைகள் போன்றவை படிப்பினையூட்டுவதுபோல் தெனாலிராமன் கதைகள் இல்லையென்றும் நகைச்சுவைக்குப் பதிலாக, தூய்மைத் தனத்துக்கு மாறாகத் தந்திரமும் குரூரத் தன்மையும் மலினச்சுவை நிறைந்ததாகவும் காணப்படுகின்றது என்றும் சான்றுகள் காட்டுகிறார்.

இறையன்பு அவர்கள் மதுரை வானொலியில் “இறையன்பு நேரம்” நிகழ்ச்சியில் வழங்கிய எழுபத்தைந்து கட்டுரைகளின் தொகுப்பே இந்நூல்.

 

மதுரை வானொலி நிலையத்தில் மற்ற உரைகளில் சிலவற்றைத் தேர்ந்தெடுத்து இந்நூல் உருவாக்கப்பட்டது. தமிழ் இலக்கியத்திலிருந்து பல செய்திகளை எடுத்து இன்றைய உலகவாழ்வோடு தொடர்புபடுத்தி புனையப்பட்ட கருத்துகளின் சாரமாக இருக்கும் இந்நுல் இயல்பான மொழியில் எந்தவித இலக்கியப் பாசாங்கும் இல்லாமல் விளங்கும் தொகுப்பு. ஒருமணி நேரத்தில் மொத்த தொகுப்பையுமே வாசித்து உள்வாங்கிக் கொள்ளமுடியும்.

இறையன்பு

 


ஐ.ஏ.எஸ். வெற்றிப் படிக்கட்டுகள்

முதல் பதிப்பு: ஜுன் 2005

பதிப்பகம்: நியூ செஞ்சுரி புக் ஹவுஸ் (பி) லிட்

 

ஒவ்வொரு இந்தியனுக்குள்ளும் ஒளிந்திருக்கும் கனவுகளில் – ஒன்று ஐ.ஏ.எஸ் ஆவதுக் குறித்துதாம். அது நனவாகுவதற்கு என்னென்ன வழிமுறைகள் – பயிற்சிகள் – வினா - விடைகள் குறித்த அனைத்து சிறப்பம்சங்களையும் இங்கே பாடமாகத் தந்துள்ளார் நூலின் ஆசிரியர் திரு.இறையன்பு.

ஐ.ஏ.எஸ் என்பது செல்வந்தர்களுக்கு மட்டுமல்ல. ஏழைக்கும் – பாமரனுக்கும் முயற்சி செய்தால் முடியாதது ஒன்றுமில்லை எனும் சித்தாந்தத்தை முன்வைக்கிறது. பாடம் ஒவ்வொன்றிலும் விளக்கமளித்து அதற்கான சம்பவங்கள் அல்லது அனுபவங்களை உதாரணமாய்ச் சொல்லும் விதம் அருமை.

ஐ.ஏ.எஸ் வெற்றிப் படிக்கட்டுகள் எனும் இந்நூலில் முக்கியமாய் தெளிக்கப்பட்டிருக்கும் அல்லது விதைக்கப்பட்டிருக்கும் உள்ளுணர்வு: வெற்றியெனும் மூலமந்திரமே. முயற்சிகளின் படியேறி தளராமல், பின்னோக்காமல் முன்னேறினால் ஐ.ஏ.எஸ் ஆவது உறுதி எனும் உன்னதக் கருத்தை அடிக்கோடிட்டுக் காட்டுகிறது.

 

தமிழகத்தில் அதிகம்பேர் குடிமைத் தேர்வுகளில் வெற்றிபெற வேண்டும் என்கிற அடிப்படையில் விழிப்புணர்வை ஏற்படுத்த எழுதப்பட்ட நூல் ஐ.ஏ.எஸ் தேர்வும் அணுகுமுறையும். அவ்வாறு ஆர்வம் ஏற்பட்டவர்களுக்கு அனைத்துத் தகவல்களையும் கலைக்களஞ்சியப் பார்வையில் ஒரே நூலில் தொகுத்துத் தரும் பொருட்டு இந்நூல் உருவானது. மாதிரிக் கேள்வித்தாள்கள், பாடத்திட்டம் போன்ற பல அம்சங்கள் இந்நூலில் இருக்கிறது. ஒவ்வொரு செய்தியும் ஒரிரு பக்கங்களில் இடம்பெறும் அளவு வாசிப்புக்கு உகந்ததாய் வடிவமைக்கப்பட்ட இந்நூல் விருப்பபாடங்கள் தேர்ந்தெடுப்பதிலிருந்து ஆளுமைத்தேர்வு எதிர்கொள்கிற வரையிலான அனைத்துச் செய்திகளையும் வாரித் தருகிற நூல். இந்நூல் வெளிவந்தபிறகு, இதை அடியொற்றி இந்தத் தேர்வை எழுதாதவர்கள் கூட பல நூல்களை எழுதினார்கள. இன்று தமிழகம் அதிகமான இளைஞர்கள் இப்பணிகளுக்கு வருகிற உயர்ந்த நிலையை அடைந்திருக்கிறது.

இறையன்பு

 


வாழ்க்கையே ஒரு வழிபாடு


ஏழாம் பதிப்பு –2011

பதிப்பகம்: விஜயா பதிப்பகம்

 

ஆன்மிகத்தை ஊறுகாயாக இல்லாமல் உணவாக மாற்றிக் கொள்ளும்போது வாழ்க்கை புதிய திசையில், அதிக விசையுடன் பயணிப்பதைப் பார்க்க முடியும். அப்போது ஒவ்வொரு நிகழ்வையும் விழிப்புணர்வுடன் அணுக முடியும். அதை வெகுநாட்களாக எழுதவேண்டும் என்கிற எண்ணம் இருந்தது. வாய்ப்பு கிடைத்தபோது ‘வாழ்க்கை ஒரு வழிபாடு’ என்கின்ற தொகுப்பாக மலர்ந்தது. மதங்களைத் தாண்டியது ஆன்மிகம் என்பதை உணர்த்த எம்மதமும் சாராமல் அனைத்து மார்க்கங்களின் சாரத்தையும் உள்ளடக்கியதாக இது விரிவடைந்த போது எனக்கு உண்மையாக திருப்தி கிட்டியது.

 

சக்தி விகடன் என்கிற இதழ் தொங்கப்பட்ட போது, அதற்காக பன்னிரெண்டு கட்டுரைகள் இந்தத் தலைப்பில் எழுதப்பட்டன. அதன்பிறகு பதின்மூன்று கட்டுரைகள் எழுதப்பட்டு மொத்தமாக ஒரு தொகுப்பு வடிவமைக்கப்பட்டது. பிறப்பிலிருந்து இறப்பு வரை ஒவ்வொரு நிகழ்வையும் ஆன்மீகப் பார்வையுடன் அணுகுவது எப்படி என்பதை எந்தச் சமயமும் சாராமல் எடுத்துச் சொல்லுகிற தொகுப்பாக இது அமைந்தது. எந்தச் சமரசமும் செயதுகொள்ளாமல் ஒட்டுமொத்தமாகச் சொல்லிவிட வேண்டும் என்கிற அவா இந்நூலின் மூலம் நிறைவேறியது. சிறந்த வாசிப்பாளரான திரு. மோத்தி ராஜகோபால் இந்நூலை சிலாகித்ததோடு நிறைய பேருக்கு பரிசாகவும் வாங்கித் தந்ததாக சொன்னார். இந்நூலைப் பதிப்பித்த திரு. விஜயா வேலாயுதம் புத்தகப் பிரியரே தவிர வர்த்தக வெறியர் அல்ல. அதிக விளம்பர வெளிச்சமில்லாத இந்நூல் 15000 பிரதிகளுக்கு மேல் ஐந்தாண்டுகளில் விற்றுத் தீர்ந்தது.

இறையன்பு


 


வேடிக்கை மனிதர்கள்

ஆறாம் பதிப்பு – செப்டம்பர் 2010

பதிப்பகம்: விஜயா பதிப்பகம்

 

திரு. வெ. இறையன்பு அவர்களுடைய படைப்புகள் கடந்த 10 ஆண்டுகளில் ஆயிரக்கணக்கான இளைஞர்கள், மாணவ மாணவியர் வளர்ச்சிக்குப் பெரிதும் பயன்பட்டிருக்கிறது. இன்றும் பயன்பட்டு வருகிறது. விற்பனையாளன் என்கிற முறையில் எண்ணற்ற வாசகர்களை நேரடியாகச் சந்திக்கும் வாய்ப்புள்ளதால், அவர்கள் சொல்லும்பொழுது எனக்கு மிகவும் மகிழ்ச்சியாக இருக்கும்.

பொழுது போக்கிற்காக புத்தகம் என்கிற சம்பிரதாயத்தை மாற்றிக் காட்டிய படைப்பாளி என்றும் இவரைப் பற்றிச் சொல்லலாம்.

படைப்பாற்றலில் பன்முக ஆளுமைத்திறன் உடையவர், “வேடிக்கை மனிதர்கள்” தொடர்ந்து தினமலர் மதுரைப் பதிப்பில் வெள்ளிக்கிழமை தோறும் வெளி வந்த பொழுது பல்லாயிரக்கணக்கான வாசகர்களைச் சென்றடைந்து, பயன் பெற்றனர்.

 

மதுரை தினமலரில் ஒவ்வொரு வாரமும் உலக இயல்புகளைப் பற்றி எழுதும்படி கேட்டிருந்தார்கள். என்மீது விழுந்திருந்த சுய முன்னேற்ற முத்திரையை அழிப்பதற்கான வாய்ப்பாக இதைக் கருதினேன். நிறைய நகைச்சுவை கலந்து அன்றாட நிகழ்வுகளை எழுதியதற்கு நல்ல வரவேற்பு கிடைத்தது. பெரும்பாலும் நாம் சிந்திக்கின்ற ஆனால் அவற்றைப் பற்றி அதிகம் பகிர்ந்து கொள்ளாத செய்திகளே இதில் இடம்பெற்றன. நிகழ்ச்சித் தொகுப்பாளர்கள். விழா கூத்துகள். சுவரொட்டிகள் போனற் பல அன்றாட நிகழ்வுகள் சிரிப்பு கலந்து எழுதப்பட்ட போது பலர் உங்களால் இப்படியும் எழுதமுடியுமா என்று தங்கள் இனிய அதிர்ச்சியைப் பகிரிந்துகொண்டனர். ஐம்பது கட்டுரைகள் வேடிக்கை மனிதர்கள் என்ற பெயரில் வெளிவந்தபோது, நிறைய பேர் வாங்கிப் படித்தார்கள். இதுவும் 15000 க்கும் மேல் விற்கப்பட்ட நூலாகும். மனம் கனக்கிறபோது தினம் படிக்கத் தகுந்த தொகுப்பு.

இறையன்பு

 


நரிப்பல்

முதல் பதிப்பு: நவம்பர் 2009

பதிப்பகம்: நியூ செஞ்சுரி புக் ஹவுஸ் (பி) லிட்

 

சராசரி மனித வாழ்விலிருந்து விலகிப்போனவர்களின்

காலடித் தடத்தையும் – பச்சைமரத்தில் அறைந்த ஆணி

போல் அசையாமல் நின்றுகொண்டிருக்கும் அன்றாடங்

காய்ச்சிகளின் வாழ்வினையும் படம்பிடித்துக் காட்டுகிறது

இச்சிறுகதைத் தொகுப்பு.

 

‘இரங்கல்’ சிறுகதையிலிருந்து ‘சமர்ப்பணம்’ வரையிலும்

வாசிக்கும் போது ஒரு ரயில்பெட்டியில் பயணம்

செய்துகொண்டு சம்பந்தப்பட்ட ஒவ்வொரு

கதாபாத்திரத்தையும் சந்தித்துவிட்டு கீழிறங்கிய

திருப்தி ஏற்படுகிறது.

 

‘மரண தண்டனை’ என்கிற கதையில் ஒரு கைதியின்

மனப் பதிவுகளாகட்டும், ‘சிறகுகள் வேண்டும்’ என்கிற

கதையில் ஒரு கிளியின் அறிவார்ந்த சொற்களாகட்டும்

எல்லாமே கண்முன்னே விரிகிறது.

 

‘விசுவாசிகள்’ என்கிற இன்னொரு கதையில் ஆக்கிரமிப்பு

நிலம் பற்றிய உரையாடல்கள் அருமையாகவும்

தெளிவாகவும் பதிவு செய்யப்பட்டிருக்கிறது.

 

ஏழைகளின் வாழ்வை நசுக்கிப் பார்த்து சந்தோசப்படுவதே

பொழுதுபோக்காகக் கருதும் சில மனிதர்களிடமிருந்து

விலகிச் செல்லும் அகதிகளாகவே பாமரர்கள்

இருக்கிறார்கள் என்கிற கூற்றும் வெளிப்படுகிறது.

ஒவ்வொரு கதையின் பின்னணியில் வலிகள் ஒரு

நூலிழை போன்று ஊடுருவிச் செல்வதை உணரலாம்.

இதழ்களின் நிர்ப்பந்தத்திற்கு இணங்கவும், ஊடகங்களின் வற்புறுத்தலையொட்டியும் பெரும்பாலும் கட்டுரைகளையும் சொற்பொழிவுகளையும் தேர்ந்தெடுத்த எனக்கு மீண்டும் படைப்பிலக்கியத்தில் அதிக கவனம் செலுத்த வேண்டும் என்று ஏற்பட்ட ஆர்வத்தின் காரணமாக சிறுகதைகள் எழுதும் உந்துதல் பிறந்தது. கடலூரில் பணியாற்றியபோது, நரிக்குறவர்களோடு நெருங்கிப் பழகும் வாய்ப்பு கிடைத்தது. அந்த நினைவலைகளை மனத்தில் தேக்கி நரிப்பல் என்கின்ற சிறுகதையை எழுதினேன். அதையே இந்தச் சிறுகதைத் தொகுப்பிற்கு தலைப்பாகவும் கொடுத்தேன்.

இறையன்பு

 

 


அழகோ அழகு

ஐந்தாம் பதிப்பு – டிசம்பர் 2009

பதிப்பகம்: நியூ செஞ்சுரி புக் ஹவுஸ் (பி) லிட்

 

கட்டுரைகள் மற்றும் வாழ்வியல்

நூல்களுக்காகவே பெரிதும்

அறியப்பட்டு வந்த வெ.இறையன்பு

அண்மைக்காலமாகப் படைப்பிலக்கியத்தில்

தீவிரம் காட்டி வருகிறார். ஏற்கனவே அவருடைய சிறுகதைகளின் தொகுப்பு அரிதாரம் என்ற பெயரில் 15 ஆண்டுகளுக்கு முன்பு வெளிவந்தது.

அதற்குப் பிறகு பூனாத்தி எனும் சிறுகதைத் தொகுப்பு அண்மையில்

வெளிவந்துள்ளது. அவற்றின் தொடர்ச்சியாக நரிப்பல், அழகோ அழகு

ஆகிய சிறுகதைத் தொகுப்புகள் வெளிவருகின்றன.

சிறுகதைகளின் தொகுப்பு. இதில் இடம்பெற்ற பெரும்பாலானவை வாழ்வில் ஏற்பட்ட நேரடி அனுபவங்களின் புனைவுகள். மதுவின் ஆதிக்கத்திற்கு தன்னை ஆட்படுத்திக்கொண்ட மனிதர்கள் வாழ்வதை விட இறந்துபோவதே குடும்பத்திற்கு பெரிய ஆறுதலாக இருக்கும் என்கிற அடிப்படை உண்மையை அழுத்தமாகச் சொல்கிற கதை இறந்தால் ஆயிரம். எல்லா பொய்களுமே ஒருவகையான துரோகங்கள் தான் என்பதை வெளிப்படுத்தும் கதை துரோகம். நேர்மையாக இருப்பதாகக் கூறிக்கொண்டு பலரை புண்படுத்துகிற அப்பட்டமான உண்மை விளம்பிகள் பற்றியும் ஒரு சிறுகதை உண்டு. அதிகம் வெளியே தெரியாத நிர்வாக நடைமுறைகளை மையமாகக் கொண்டும் இதில் சிறுகதைகள் இடம்பெற்றிருக்கின்றன. எதிர்பார்ப்புகள் நிகழ்வுகளைக் காட்டிலும் சுவாரஸ்யமானவை என்பது கடவுள் என்கிற சிறுகதையில் விளிப்படுகிறது. வழக்கமான சிறுகதைகளின் இலக்கணங்களை மீறிய சிறுகதைகளின் தொகுப்பு இது.

இறையன்பு

 

 


பூனாத்தி

முதல் பதிப்பு: ஏப்ரல் 2009

பதிப்பகம்: விஜயா பதிப்பகம்

 

இதுநாள் வரை அதிக அளவில் கட்டுரைகளையே எழுதி வந்து, இப்பொழுது படைப்பிலக்கியத்தில் அதிக கவனம் செலுத்த ஆரம்பித்துள்ளார். அவ்வகையில் அனுபவங்களையும் நடப்பனவற்றையும் வைத்து எழுதப்பட்டவையே இந்தச் சிறுகதைத் தொகுதி. எனவே இது முக்கியத்துவம் வாய்ந்ததாகக் கருதப்படுகிறது. தனிமையில் ஒரு வரவு எத்தனை மகிமைகளை ஏற்படுத்த முடியும் என்பதை இக்கதைத் தொகுப்பில் உள்ள பூனாத்தி என்ற கதை விவரிக்கிறது. அந்தக் கதையே இத்தொகுப்புப் பெயராகிறது.

ஆழமான சிறுகதைகளை உள்ளடக்கிய நூல். நம் அடிப்படை இயல்புகள் எப்போதும் மாறாமலேயே இருக்கின்றன என்கிற உண்மை உயிர்த்தெழுதல் என்கிற சிறுகதையின் மூலம் கன்னத்தில் அறைவது போல சொல்லப்பட்டிருக்கிறது. ராபின்சன் குருசோவிற்கு தனிமையில் பூனை கூட சிநேகிதனாகத் தோன்றியதைப் போல வாழ்வின் எதிர்பாராத தருணத்தில் அடிக்கடி வீட்டிற்கு வந்துபோன பெண்பூனை ஆறுதலாய் இருந்ததை தலைப்புக் கதை விவரிக்கிறது. அலுவலர்கள் அரசியல் மாற்றங்களில் சிக்கிச் கொண்டு தவிப்பதை இந்நிகழ்வு வெளிப்படுத்தியது. ஒவ்வாரு கதைக்கும் ஒரு ஓவியமும் வரையப்பட்டு வாசிக்கிற அனுபவத்தை நிறைவாக்குகிற தொகுப்பாக இது திகழ்கிறது.

இறையன்பு

 

 


 

திருப்பாவைத் திறன்


முதல் பதிப்பு – டிபம்பர் 2008

பதிப்பகம்: விஜயா பதிப்பகம்

 

பாவை தோன்றிய காலத்துக்கும் இன்று நாம் வாழும் பரபரப்பு காலத்துக்கும் நிறைய வேறுபாடுகள். அன்றிருந்த பக்திக்கும் இன்றிருக்கும் பக்திக்கும் நிறைய மாறுபாடுகள். எதையும் கணினி வைத்துக் கணக்குப் பார்க்கும் அறிவியல் காலம் இது. அறிவியல் தொழில்நுட்பக் காலத்தின் தளத்தில் கால்வைத்துக் கொண்டு, பாவைப் பாடல்களை பயன்படும் தன்மையில் நயம் பாராட்டினால் எப்படியிருக்கும்? இந்தப் புதுவித இலக்கியப் பரிசோதனை முயற்சியின் சிறந்த விளைவே, இன்று உங்கள் கரங்களில் திகழ்ந்து கொண்டிருக்கும் இறையன்புவின் ‘திருப்பாவைத் திறன்’.

மதுரை வானொலியில் மார்கழி மாதத்தில் திருப்பாவை குறித்து முப்பது நாட்களும் தான் பேச வேண்டுமென்று நண்பர் சுந்தர ஆவுடையப்பன் வற்புறுத்தினார். இரண்டு நாள் உங்களுக்குப் போதுமென்று அவர் கொடுத்த நம்பிக்கையில் திருப்பாவை குறித்து வெளிவந்த பல நூல்களை நான் வாசிக்க முடிந்தது. பாடுவதற்கு ஏற்ற திருப்பாவைக்கு பொருள் கூறுகிறேன் எனப் புறப்படுவது அதிலிருக்கும் கவிதைத் தனத்தையும், இசை நயத்தையும் இழக்கச் செய்துவிடுமென்பதை நான் உணர முடிந்தது. எனவே ஒவ்வொரு பாடலும் எனக்கு ஏற்படுத்திய தாக்கத்தை மாத்திரம் பதிவு செய்வது போல் அந்தச் சொற்பொழிவுத் தொடரை வடிவமைத்தேன். ஒரே நாளில் முழுத்தொடரும் ஒலிப்பதிவானது. இன்றைய சூழ்நிலையில் சூடிக்கொடுத்த நாச்சியாரின் பதங்களுக்கு புதிய பொருளை உணரமுடியுமென்பதை பல இடங்களில் வலியுறுத்தியிருக்கிறேன். திருப்பாவையில் இயற்கை அதிகமாக ஆராதிக்கப்பட்டிருப்பதாக நான் அறிந்துகொண்டேன். பறவைகள் ஏன் பாடுகின்றன என்பது குறித்த விளக்கம் அறிவியல் பார்வையை அரவணைத்துச் சொல்கிறது.

 

இறையன்பு

 

 


வைகை மீன்கள்

முதல் பதிப்பு: செப்டம்பர் 2009

பதிப்பகம்: நியூ செஞ்சுரி புக் ஹவுஸ் (பி) லிட்

 

இந்தக் காதல் காவியத்தினுடே அடி அடியாய், அணு அணுவாய்ப் பயணம் செய்யச் செய்ய வாசக நெஞ்சில் இறுக்கமும் அழுத்தமும் கூடிக்கொண்டே போகின்றன... என்ன நேரும் என்ன நேரும் என்பதாக...

ஜார்ஜ் சிமனான் என்ற பிரெஞ்சு நாவலாசிரியரின் கதை சொல்லும் நேர்த்தி எப்படியிருக்கும் என்பதைச் சொல்லும்போது இப்படிச் சொல்லுவார்கள்... “கதையின் முடிவு நமக்குத் தெரியும்., ஆனாலும் ஒரு பரபரப்பு., ரயில் வருகிறது என்று தெரிந்தாலும் அது நெருங்க நெருங்க பிளாட்பாரத்தில் ஏற்படும் பரபரப்பு போல...” என்பார்கள்.

இறையன்புவின் கதை நிகழ்த்தும் நேர்த்தியும் அதற்கு நிகரான பரபரப்பை உண்டு பண்ணுகிறது. தாமிரச் செம்பில் வைத்த கங்கை நீராய்ப் பரிசுத்தம் தாங்குகிறது “வைகை மீன்கள்”.

இரும்புச் சட்டமாக இருக்கும் இந்திய ஆட்சிப் பணியில் இதயம் உள்ள மனிதராக விளங்கும் இறையன்புவை நான் எப்போதும் நேசித்து வந்திருக்கிறேன்.

இறையன்புவுக்கு என் நெஞ்சின் நிறைய அன்பு.

--- முன்னுரையில் சிற்பி பாலசுப்பிரமணியம்.

வாய்க்கால் மீன்கள் கவிதையில் இணையாமல் போன காதலர்களைப் பற்றிய துக்கம் பலருடைய தொண்டையில் கோலி சோடாவிலிருக்கும் கோலியைப் போல உருண்டு கொண்டிருந்ததை உணர்ந்து அதன் தொடர்ச்சியாக அவர்களை இணைக்கும் முயற்சியாக வைகை மீன்களை எழுதினேன். பாதி எழுதிக்கொண்டிருக்கும் போது மூடி வைத்துவிட்டு விமான நிலையம் நோக்கி செல்லும்போது மலேசியாவில் விபத்து நடந்தது. கடைசியாக எழுதிய வரிகள் விபத்து போல் அந்த சம்பவம் விளைந்துவிட்டது என்பதுதான். அதற்குப் பிறகு ஒரு மாதம் படுக்கையிலிருக்கும்போது மிச்ச நூலை எழுதி முடித்தேன். இன்னும் பரவலாக வாசகர்களைச் சென்றடையாத கவிதை நூல். ஒருமணி நேரத்தில் வாசித்து விடலாம்.

இறையன்புசாகாவரம்

முதல் பதிப்பு: நவம்பர் 2009

பதிப்பகம்: நியூ செஞ்சுரி புக் ஹவுஸ் (பி) லிட்

 

மனம் சலனமற்று இருந்தது. ‘இனி எதுவுமே ஞாபகம் வராது’ என்பது மட்டும் புரிந்தது. கடந்த காலம் முழுமையாகக் கழன்று விட்டது என்பது மட்டும் புரிந்தது. அது அவனிடம் எந்தத் துக்கத்தையும் ஏற்படுத்தவில்லை. தன் இருத்தலை ஒரு சிலையின் இருத்தலாக உணர்ந்தான். நீரில்லாத ஏரியின் சலனமற்ற நிலையில் அவன் இருந்தான். அந்தத் தீவு முழுவதும் மயான அமைதி வியாபித்திருப்பதாகப்பட்டது. – இது இறையன்புவின் அடுத்த நாவலில் இடம்பெறும் தத்துவார்த்த வாசகங்கள்.

பெரும்பாலும் கட்டுரை எழுதுவதுபவராக அறியப்பட்ட இறையன்பு, அண்மைக்காலமாக படைப்புலகில் அக்கறை செலுத்தி எழுதியுள்ள படைப்புகளின் தொடர்ச்சியாக வெளிவருகிறது அவரது ‘சாகாவரம்’ என்கிற இந்த இரண்டாவது நாவல். அவர் எழுதிய முதல் நாவல் ‘ஆத்தங்கரை ஓரம்’ அணைக்கட்டு குறித்த பல பிரச்சனைகளை முன்வைத்தது. இந்த நாவல், மரணம் குறித்த விசாரணையாக உருவெடுத்திருக்கிறது.

இரண்டாவது நாவல். மரணம் குறித்த விசாரணையாக உருவானது. அடிக்கடி மரணத்தைச் சந்திக்கின்ற நசிகேதன் என்கிற இளைஞன் மரணமில்லாத வாழ்வைத் தேடி பயணம் செய்கிறான். அப்படியொரு வாழ்வு அமைந்தால் அது மரணத்தை விடக் கொடுமையானதாக இருக்கும் என்பதை உணர்கிறான். நாவல் முழுக்க மரணம் பற்றியே எழுதப்பட்டிருப்பதால் அதிகம் பேரைச் சென்று அடையாது என்று நினைக்கப்படிருந்தாலும் வாசகர்களின் வரவேற்ப்பை பெற்று ஓராண்டில் 5,000 க்கும் மேல் பிரதிகள் விற்றுத் தீர்ந்தன. விமர்சனங்களும் அதற்குக் காரணம். நாவலில் கடைசிப் பகுதி முழுக்க முழுக்க கற்பனையான உலகம் சார்ந்தது. நீங்கள் நிறைய நாவல்கள் எழுத வேண்டும்மென்று இதை வாசித்த பிறகு ‘புதிய தலைமுறை’ ஆசிரியர் திரு. மாலன் உற்சாகம் தந்தார். அரசு கேள்வி பதிலில் இதுகுறித்து மிக நன்றாக எழுதப்பட்டிருந்தது.

இறையன்பு

நெஞ்சைத் தொட்டதும்... சுட்டதும்...

முதல் பதிப்பு: ஜூலை 2010

பதிப்பகம்: விஜயா பதிப்பகம்

 

‘எழுதுவது’ எல்லோரும் விரும்புகிற விஷயம், ஆனால் பலருக்கும் பல்வேறு கோணங்களில் வெளிப்படுகிறது. ஒருவரின் சமூக வாழ்நிலையும் சுற்றுப்புறங்களின் பாதிப்பும்தான் எழுத்திற்கான அடித்தளமாகிறது. அவ்வகையில் திரு.வெ. இறையன்பு தன்னுடைய நெருக்கடியான அலுவலகப் பணிகளுக்கிடையில், அவருடைய வேலைக் களைப்பைப் போக்கிக் கொள்ளும் விதமாக தனக்கு நேர்ந்த அனுபவங்களையும் பாதித்த நிகழ்வுகளையும் போகிற போக்கில் வாசகர்களுடன் பகிர்ந்து கொள்கிறார். எப்பொழுதுமே யதார்த்தத்தில் நடக்கின்ற நிகழ்வுகளுக்கு ஒரு வலிமை உண்டு. அதன் பாதிப்பு தான் “நெஞ்சைத் தொட்டதும்... சுட்டதும்...“ என்பதை இதனைப் படிப்பவர்கள் உணர்வார்கள்.

 


உன்னோடு ஒரு நிமிஷம்

முதல் பதிப்பு: பிப்ரவரி 2010

பதிப்பகம்: விகடன் பிரசுரம்

 

சுட்டி விகடனில் எழுதுவதற்கு வாய்ப்பு வந்தபோது சற்று பதற்றமாகத்தான் இருந்தது. மாணவர்களுக்கும் இளைஞர்களுக்கும் நிறைய எழுதியும் பேசியும் இருக்கிறேன் என்றாலும், குழந்தைகளுக்காக எழுதுவது என்பது எவ்வளவு சிரமம் என்பதை நான் உணர்ந்திருக்கிறேன். நாமே குழந்தைப் பருவத்துக்குப் பயணப்பட சம்மதிக்கும் போதுதான் அதைச் செவ்வனே செய்யமுடியும் என்பதை நான் உணர்வேன். அவர்கள் அருகிலேயே அமர்ந்துகொண்டு உரையாடுவதைப் போல பகிர்ந்து கொள்வதுதான் எழுதும் நோக்கத்தை நிறைவேற்றி வைக்கும். அந்த வகையில் ‘உன்னோடு ஒரு நிமிஷம்!’ என்கிற தொடர் எனக்குப் புதிய அனுபவமாக இருந்தது.

ஒவ்வொரு இதழிலும் ஒரே ஒரு செய்தியை மாத்திரம் அழுத்தந்திருத்தமாக அவர்கள் மனதில் பதிய வைக்க வேண்டும் என்று முடிவு செய்தேன். சின்ன வயதில் நான் எவற்றையெல்லாம் செய்வேன் என்பதைக் காட்சிப்படுத்திப் பார்த்து, அவற்றின் அடிப்படையில் இந்தத் தொடர் தொடர்ந்தது.

‘சுட்டி விகடன்’ இதழில் ஒரு பக்கத்திற்கு ஒவ்வொரு இதழிலும் எழுதப்பட்ட கட்டுரைகள். விகடன் பிரசுரம் வெளியிட்டது. குழந்தைகளுக்காக எழுதப்பட்டாலும் பெரியவர்கள் அதிகம் வாசித்தார்கள். இன்றைய குழந்தைகளுடைய வாழ்க்கையில் தென்படாத சில கூறுகளை நம்முடைய வாழ்க்கையிலிருந்து தொடங்கி பகிர்ந்து கொள்வது போல் ஏழுதப்பட்ட நூல். அழகான படங்களோடு வெளிவந்த நூல்.

இறையன்பு

 


பத்தாயிரம் மைல் பயணம்


முதல் பதிப்பு – டிசம்பர் 2010

பதிப்பகம்: புதிய தலைமுறை பதிப்பகம்

 

மனித வாழ்வில் பயணங்கள் ஏற்படுத்திய மாற்றங்களை எண்ணிப் பார்த்தால் சிறப்பாக இருக்கும். இருக்கிறது. அதை திரு. இறையன்புவின் வழி தரிசிக்கும் போது அந்த ஆச்சரியம் பல மடங்காக விரிகிறது, தொலைநோக்கியின் வழியே நட்சத்திர மண்டலங்களைப் பார்ப்பது போல. அதே நேரம் அவை சிந்தனையையும் தூண்டுகின்றன, ஒரு நுண்ணுயிரை சூட்சம தரிசினியின் மூலம் காண்பதைப் போல.

அது திரு. இறையன்புவின் சொல்லிற்குள்ள வலிமை. கவிதையானாலும், கதையானாலும், கட்டுரையானாலும், உரையானாலும், ஒன்றை ஒரே நேரத்தில் விரிவாகவும் நுட்பமாகவும் சித்தரிக்கும் ஆற்றல் அவருக்குண்டு. நிறைய விவரங்களை எண்ணற்ற ஓவியங்களில் சித்தரிக்கும் மொகலாயச் சிற்றோவியங்களை (Mughal Miniatures) போன்றது அவரது அணுகுமுறை.

சுவாரசியமும், விவரிப்பும் ஒன்றுக்கொன்று முரணானதாக இருக்க வேண்டிய அவசியமில்லை. கற்பனை மட்டுமல்ல உண்மைகளும் கூட சுவாரஸ்யமாக இருக்க முடியும். அதற்கு இந்த நூலே சாட்சி.

‘புதிய தலைமுறை’ வார இதழ் தொடங்கப்பட்ட போது, “இளைஞர்களுக்காக ஒரு தொடர் வேண்டும்” என்று கேட்டபோது பயணங்களை மையமாக வைத்து எழுத ஆரம்பித்தேன். பயணங்களால் மனித நாகரிகம் எப்படி மேம்பட்டது என்பது குறித்த பறவைப் பார்வையாக இந்தத் தொடர் மலர்ந்தது. சீனத்தில் ஒரு பழமொழி இருக்கிறது. ஒருவன் மரணம் அடைவதற்கு முன் பத்தாயிரம் புத்தகங்கள் படித்திருக்க வேண்டும்; பத்தாயிரம் மைல் நடந்திருக்க வேண்டும். பயணத்தின் மூலமாக விளையாட்டுகள், உணவு தானியங்கள், உணவு வகைகள், வளர்ப்பு மிருகங்கள், மருத்துவம், வாசனை திரவியங்கள் போன்றவை எவ்வாறு பரவின என்பதை சில கதைகளையும் கலந்து வாசிப்பதற்கு தகுந்தவாறு சொல்ல மேற்கொண்ட முயற்சி. சுற்றுலா துறையில் இருந்ததால் அத்துறைக்கு நான் ஆற்றிய மகிப்பெரிய கடப்பாடாக இதைக் கருதுகிறேன், பயணம் செய்யாத பல பகுதிகளுக்கு எப்படி தீவாய் தேங்கி மறைந்தன என்பது பற்றியும் கோடிட்டு காட்டியுள்ளேன். எனக்கு மிகுந்த மன நிறைவைத் தந்த நூல்.

இறையன்புமென்காற்றில் விளை சுகமே!

ஐந்தாம் பதிப்பு – நவம்பர் 2008

பதிப்பகம்: நியூ செஞ்சுரி புக் ஹவுஸ் (பி) லிட்

 

மென்காற்றில் விளை சுகமே!’ எனும் இக்கட்டுரைத் தொகுப்பில் ஏற்படும் தாக்கம் மனிதகுலத்தின் ஆணிவேரினை அசைத்துப் பார்ப்பதாய் உள்ளது.

நூலாசிரியர் திரு.இறையன்பு ஐ.ஏ.எஸ் அவர்களின் படைப்புகளில் இந்நூல் ஒரு மைல்கல் என்றே சொல்லலாம். இளைய சமுதாயத்தின் மீதுள்ள அக்கறை எழுத்துகளில் பிரதிபலிக்கின்றது. எங்கோ ஒரு மூலையில் தன்னிலை மறந்து முடங்கிக்கிடக்கும் பாமரனையும் கூடத் தட்டியெழுப்பும் தன்னம்பிக்கைகள் இங்கே விளைந்து கிடக்கின்றன.

பொதுவாக, சொல்வது என்பது எளிது. செய்வதுதான் கடினம். எப்படிச் சொல்லிச் செய்ய வைப்பது என்பதை இந்நூல் நன்றாகவே செய்துகாட்டுகிறது. இது வெறும் நூலாக மட்டுமல்லாமல்; ஒரு மனிதமாகவே தன்னுள்ளுணர்வுகளை வெளிப்படுத்திக் கொண்டுநிற்பது அலாதி.

 

வள்ளலாருடைய கோடையிலே இளைப்பாறிக் கொள்ள வகைகிடைத்த குளிர்தருவே அருட்பாமிகுந்த பொருள்நயம் கொண்டது. வரலாற்று நிகழ்வுகளை மையமாக வைத்து ஒரு செய்தியைச் சொல் வேண்டுமென்று கோவை வானொலி நிலையம் கோரியதற்கு இணங்க அந்நிலையத்திற்காக மரகத மண்டபம் நிகழ்ச்சிக்கு ஆற்றிய சொற்பொழிவுகள் அருட்பாவின் அழகிய பதத்தை தலைப்பாகக் கொண்டு தொகுக்கப்பட்டது. காற்றின் மூலமே ஒலியை உணரமுடியும் என்கிற பொருளில் இத்தலைப்பு தேர்ந்தெடுக்கப்பட்டது.

இறையன்பு

 


பணிப் பண்பாடு

முதல் பதிப்பு: மே 2009

பதிப்பகம்: நியூ செஞ்சுரி புக் ஹவுஸ் (பி) லிட்

 

‘மற்றவர்களுக்காகப் பணி செய்கிறோம்’ என நினைத்தால் உடலில் தளர்வும் உள்ளத்தில் சோர்வும் ஏற்படும். “நமக்காகவே நாம் பணியாற்றுகின்றோம்” என்கிற உண்மை புரிந்தால், உழைப்பு களைப்பை வரவழைக்காது. ஈடுபாடு இல்லாமல், எந்தப் பணியைச் செய்தாலும் அது வயலுக்குப் பாய்ச்சும் வாய்க்காலாக இல்லாமல், நிழலுக்கு இறைத்த நீராகிவிடும். நேரத்தை மாத்திரம் சேர்த்து வைக்க முடியாது. இன்று பணியாற்ற மறுத்தால், ஒருநாள் போனது போனதுதான். மகத்தான மண்டபத்தை உருவாக்க நினைக்கிறபோது, அதில் கலசம் வைக்கிறவர்கள் மட்டுமல்ல; கடைக்கால் எழுப்புபவர்களும் அக்கறையோடு பணியாற்றினால்தான், கட்டடம் காற்றில் இடிந்து விழாமல் காப்பாற்றப்படும்.

சென்னை வானொலியில் உழைப்பின் மகத்துவம் பற்றி ஐந்து நாட்கள் உரையாற்றக் கேட்டிருந்தார்கள். அந்த உரைகள் பணிப்பண்பாடு என்கிற சின்னச் சஞ்சிகையாகத் தொகுக்கப்பட்டது. அரை மணி நேரத்தில் வாசித்து விடலாம். பல நிறுவனங்கள் இந்த நூலை தன்னுடைய பணியாளர்களுக்கு வாங்கி வழங்கி கட்டாயம் படிக்கவேண்டும் என்று வற்புறுத்தின. பணியை பாரமாகக் கருதாமல் இனிமையான நிகழ்வாகக் கருதவேண்டும் என்கிற மையக் கருத்து சின்ன சம்பவங்களின் துணையோடு சுவாரஸ்யமாகக் கூறப்பட்டிருந்ததால் இதை போல நிறைய எழுதவேண்டுமென்று பதிப்பாளர்கள் வற்புறுத்தினார்கள். இதை வாசித்த பலர் தாங்கள் செய்கிற பணியை புதிய அணுகுமுறையுடன் நோக்குவதாகத் தெரிவித்திருந்தார்கள். அந்த வகையில் இது வெற்றி பெற்ற நூல்.

இறையன்பு

 


சிற்பங்களைச் சிதைக்கலாமா?

முதல் பதிப்பு: டிசம்பர் 2009

பதிப்பகம்: நியூ செஞ்சுரி புக் ஹவுஸ் (பி) லிட்

 

தமிழகம் எண்ணற்றக் கோயில்களைத் தன்னகத்தே கொண்டிருக்கிறது. முப்பதாயிரத்திற்கும் மேற்பட்ட கலைவடிவங்களைத் தன் மேனி முழுவதும் மேவி, பண்பாட்டின் அடையாளமாகத் திகழ்கிறது. திரும்பிய பக்கமெல்லாம் வழிபாட்டுத் தலங்கள். வரலாற்று நிகழ்வுகளுடன் பின்னிப் பிணைந்த புனைவியல் சித்திரிப்புகள். அவை உணர்த்தும் வாழ்வியல் தத்துவங்கள். ஒவ்வொரு கோயிலையும், உன்னிப்பாக வலம் வந்து அங்கு இருக்கும் கட்டடக் கலை நுட்பத்தையும், கவின்மிகு சிற்பங்களின் நுணுக்கத்தையும் நுகர்ந்தால் மெய்ஞானம் கிடைத்த அனுபவம் வாய்க்கப் பெறும்.

சுற்றுலாத் துறையில் இருக்கும் போது சிற்பங்களை குலைப்பது குறித்து வருத்தப்பட்டு மாநில அளவில் பல முகாம்களை நடத்தினோம். இச்சிந்தனை பரவலாகச் சென்றுசேர வேண்டும் என்பதற்கு செய்தித்தாள்களில் விளம்பரங்களும் தரப்பட்டன. ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்பு மினசாரம் இல்லாத காலத்தில் மிகுந்த சிரமப்பட்டு உயிரை பணயம் வைத்து உருவாக்கிய அற்புதச் சிற்பங்களை கரி கொண்டும், கல் கொண்டும் சிதைக்கும் மனநிலையை கண்டித்து எழுதப்பட்ட கட்டுரை. நம்மிடம் தொன்மைச் சின்னங்கள் அதிகம் இருப்பதாலேயே அலட்சியப்படுத்துகிறோமோ என்று தோன்றுகிறது.

இறையன்பு

 


STEPS TO SUPER STUDENTS

First Edition January 2007

Publishers: New Century Book House

 

Iraianbu, author of Steps to Super Students, is well-known as an outstanding administrator and writer. He has earned a name for himself by identifying with social cause, and helping people solve their problems promptly and satisfactorily. He is a popular writer, both in Tamil and English, and his books published hitherto have been well-received and appreciated.

The present work, Steps to Super Students, covers the prime of youth, from commencing studies in childhood to the advanced stages of appearing for examinations – general, institutional and competitive. In twenty five chapter, the author deals with a number of subjects such as children education – making it pleasant without causing unnecessary distaste or pain – the role of parents in educating children, the teachers’ involvement and dedication, planning studies at various stages in higher classes, methods of learning, memorizing and remembering and preparing for and facing the examinations and securing high marks and scoring ranks… are all well-expounded.

 


RANDOM THOUGHTS


First Edition August 2010

Publishers: The Hindu Publication

 

‘Random Thoughts’ is a collection of 51 essays written by Thiru.V.Irai Anbu, a senior I.A.S. office of Tamil Nadu under a fortnightly column in the Madurai edition of THE HINDU Metroplus over 100 weeks.

For V.Irai anbu who is famous for his writing and oratorical skills in Tamil, this was a maiden sally into popular English writing. He chose his topics at random, from nature and human behavior. Each essay of about 600 words contains words of wisdom from a man who has un unquestionable depth of knowledge. ‘Random Thoughts’ is not an exercise in pontification but a portrayal of human behavior and beliefs.

V.Irai anbu in ‘Random Thoughts’, attempts to help the reader visualize abstract qualities through appropriate use of metaphor and imagery. All the essays are laced with subtle humour that has a functional use. The need not be read as a philosophic treatise but as a common man’s observations of human nature. It is like standing in from of a mirror and laughing at one’s own deficiencies.

Each work carries a distinct stamp: alliteration. A person famous for the musical use of Tamil in speech and writing has attempted it in English too, with considerable success. “When the mundane disappears, the sublime surfaces. We smell the extraterrestrial aroma and hear the extraordinary concert. We stumble upon super consciousness and communicate sans world, sings and gestures.”

He has consciously chosen the simple sentence for structuring his work. This structural device has helped him to load each sentence with meaning and also make the reader pause and contemplate on what he has read. “There is nothing called non-violent revenge. The very thought to attack is violent. Pregnant anger is worse than delivered action”. No doubt the column attracted readers of all ages.

THE HINDU take pride in publishing the “Random Thoughts” of V. Irai anbu, which I am sure would be cherished as a prized possession by the readers.

 


 

பூபாளத்திற்கொரு புல்லாங்குழல்


ஆறாம் பதிப்பு –  ஏப்ரல் 2006

பதிப்பகம்: நியூ செஞ்சுரி புக் ஹவுஸ் (பி) லிட்

‘பூபாளத்திற்கொரு புல்லாங்குழல்’ என்னும் இந்நூல் ஒரு கவிதைப் பூஞ்சோலை. இச் சோலையில் மலர்ந்துள்ள மலர்களைக் காட்டிக்கொடுத்து இது வாசனையுடையது, இது வாசனை இல்லாதது என்று சொல்லிக்காட்ட வேண்டிய நிலை இல்லாமல் எல்லா மலர்களுமே வாசனை பரப்பி மணம் கமழச் செய்கின்றன. மணம் கமழச் செய்திருப்பவர் எழுத்துலகில் முன்னணியில் திகழும் வெ.இறையன்பு ஆவார். ஐ.ஏ.எஸ். அதிகாரியாக இருக்கும் அவர் சமுதாயத்தைப் பலகோணங்களில் அணுகி, பார்வையிட்டு, அனுபவித்துப் பல கவிதை வரிகளை வார்த்துத் தந்திருக்கிறார்.

நெருங்கிப் பழகியவர்களிடத்திலும், தூரத்தில் இருப்பவர்களிடத்திலும் நேர்மையான அரசு அதிகாரி என்ற பெயரை நிலைநிறுத்திக்கொண்டிருக்கும் இறையன்பு அவர்களிடம் ஒரு நேர்மையான சமுதாயத்தை உருவாக்கும் துடிப்புணர்வு மேலோங்கி நிற்கிறது.

 

என்னுடைய முதல் நூல். கல்லூரியில் எழுதிய புதுக்கவிதைகளின் தொகுப்பு. வெளியிட்ட போது இருந்த கவிதைச்சூழல் முற்றிலும் மாறிப் போயிருந்தது. ஒருவகையில் அது காலாவதியான கவிதைகளின் தொகுப்பாக இருந்தது. ஆனாலும் எழுத்தின்மீது எனக்கு ஆர்வம் இருக்கிறது என்பதை மற்றவர்களுக்கு உணர்த்துகிற ஒரு விசிட்டிங் கார்டாக இந்த நூல் திகழ்ந்தது. எழுதுவதற்கு நிறைய சிரத்தை எடுத்துக் கொள்ளவேண்டுமென்பதை எனக்கு உணர்த்திய போதிமரம் இநத நூல்.

இறையன்பு

 


இனியவை இனியவை இறையன்பு


முதல் பதிப்பு – பிப்ரவரி 2009

பதிப்பகம்: நியூ செஞ்சுரி புக் ஹவுஸ் (பி) லிட்

 

இறையன்புவின் எல்லா நூல்களுமே இனியவற்றைச் சொல்வன. இதில் எனக்கு இனித்தவை இவை மட்டும்தான் என்று என்னால் சொல்ல முடியாது. வீட்டு நூலகத்தில் வைத்துப் படிக்கலாம். ஏதேனும் ஒரு பயணத்திலோ அல்லது உடனே படிக்க அலுவலக மேஜையிலோ, வீட்டில் படிப்பு மேஜையிலோ வைத்துக்கொள்ள ஒரு நூல் தேவைப்பட்டால் இந்த நூல் பயன்படும்; அவ்வளவுதான். ஒரு பெருநகரத்தின் விரிந்த பரப்பளவை ஒரு சிறிய வரைபடம் காட்டுவது போல, இறையன்புவின் படைப்பு ஆளுமைக்கான அறிமுகத்தை இச்சிறுநூல் வழங்கலாம்.


 


சறுக்குமரம்

முதல் பதிப்பு: ஜூன் 2009

பதிப்பகம்: விஜயா பதிப்பகம்

 

காத்திருத்தல்

 

காத்திருப்பவர்களே பூத்திருப்பவர்கள்;

வேகமெடுப்பவர்கள் வெந்துவிடுபவர்கள்

சிலுசிலுவென வேரை நனைக்கும்

பயிர்களைக் காட்டிலும்

மழைக்காக வானம் பார்க்கும் செடிகளில்

வைராக்கியம் அதிகம்.

 

தவழ்ந்தோம்

மகிழ்ந்தோம்

 

எங்கள் குழந்தைப்பருவம்

இனிமையானது -

நாங்கள் தக்க வைத்துக்கொண்டவை

தவறவிட்டவையைக் காட்டிலும்

அதிகமானவை.

ராணி வார இதழில் இருபது வாரங்கள் வெளிவந்த கவிதை வடிவிலான கட்டுரைகளின் தொகுப்பு. கண்ணீர், விடுதி வாழ்க்கை, மரணம், மரங்கள் என்று சுய அனுபவக் குறிப்புகளோடு வெளிவந்த போது பலர் படித்து பாராட்டுகளைத் தெரிவித்தார்கள். ஒவ்வொரு மனிதனுக்குள்ளும் வசந்தமாக அவனுடைய பால்ய பருவமும், பதின்ம பருவமும் பதிந்திருக்கின்றன. எதிர்காலத்தில் அவற்றைத் தேடும் முயற்சியாகவே அவனுடைய வாழ்க்கை நீடிக்கின்றது. சமவயது உள்ளவர்கள் தங்கள் விடுதி வாழ்க்கையை, தங்கள் அனுபவங்களை இந்நூல் எதிரொலிப்பதாகத் தெரிவித்தார்கள். அன்று வாழ்க்கையை நுகர வாய்ப்புகளும், கால அவகாசங்களும் அதிகமாக இருந்தன.

இறையன்பு


இறையன்பு களஞ்சியம்

முதல் பதிப்பு: மார்ச் 2010

பதிப்பகம்: நியூ செஞ்சுரி புக் ஹவுஸ் (பி) லிட்

 

‘இறையன்பு களஞ்சியம்’ என்னும் இத்தொகைநூல் (Anthology) பன்னிம இயல்களில் இறையன்புவின் சிந்தனைகளை நிரந்தினிது தந்துள்ளது. ‘அமுத மொழிகள்’ தொடங்கி ‘உதிரிப் பூக்கள்’ வரையிலான இத்தொகை நூலினை மனம் கலந்து பயில்வோர் ஊக்கமும் உள்வலியும் கைவரப் பெறுவர்; நெஞ்சில் உரமும் நேர்மைத் திறமும்கொண்ட ஆளுமையாளராக வாழ்வில் உயர் நிலையை அடைவர், ‘ஆயிரம் சாதனைகளைக் காட்டிலும் ஒரே ஓர் உள்ளத்திலாவது நம்பிக்கை விளக்கேற்றுவது வாழ்க்கையின் பொருளை முழுமையாக்குவது’ என்பார் இறையன்பு. அவரது சொற்களைக் கொண்டே நாமும் இத்தொகை நூலைக் குறித்து இங்ஙனம் மதிப்பிடலாம். “படிப்பவர் உள்ளத்தில் நம்பிக்கை விளக்கேற்றி, வாழ்க்கையின் பொருளை முழுமையாக்குவதில் சாதனை படைக்கவல்லது இத்தொகை நூல்!” 


இறையன்பு சிந்தனை வானம்

முதல் பதிப்பு: டிசம்பர் 2004

பதிப்பகம்: நியூ செஞ்சுரி புக் ஹவுஸ் (பி) லிட்

 

வானம் எல்லையற்றது. அதைப்போல் மனித மனத்தில் தோன்றும் சிந்தனைகளும் எல்லையற்றவை. மனித மனத்திலிருந்து அன்பு அலைகள் மட்டுமே எழ வேண்டும் என்பது எழுத்தாளர்களின் சிந்தனை. மனதில் சுயநலம் மிகுந்துவிட்டால் அலைகள் ஆரவாரமாகி ஆழிப்பேரலைகள் போல் (சுனாமி) பிறர் வாழ்வைச் சிதைத்து விடுகின்றன. சுயநலம் மிகுந்தவர்களின் சிந்தனை சுற்றியிருப்பவர்களை நசுக்கிக் கொண்டேயிருக்கும். ஆனால்; நல்லெண்ணம் கொண்டவர்களின் சிந்தனை மேல் நோக்கிச் சிறகடித்துப் பறந்துகொண்டிருக்கும். அது யாரையும் நோகடிப்பதில்லை. சாகடிப்பதில்லை.

அந்த வகையில் கவிஞரும், எழுத்தாளரும், இந்திய ஆட்சிப்பணி அலுவலருமான இறையன்பு அவர்களின் பரந்து விரிந்த சிந்தனைகளைப் புகழ்பெற்ற எழுத்தாளர் டாக்டர் சுந்தர ஆவுடையப்பன் அவர்கள் சிறப்பாகத் தொகுத்துத் தந்துள்ளார். இறையன்பு அவர்களின் பதினாறு படைப்புகளில் பல கோணங்களில் பார்வையை பதித்து அங்கீகாரம், அச்சம், அரியது, அழகு, அறிவியல், அறிவு, அனுபவம் உட்பட எழுபத்தைந்துக்கு மேறபட்ட தலைப்புகளில் சிந்தனை விதைகள் விதைக்கப்பட்டு விளைநிலமாக ‘இறையன்புவின் சிந்தனை வானம்’ என்னும் நூல் உங்கள் கரங்களில் தரப்படுகிறது.

 


RIPPLES

First Edition August 2007

Publishers: New Century Book House

 

Mr. V. IRAIANBU I.A.S., one of the best selling author in Tamil, currently Secretary to Government of Tamil Nadu, Department of Tourism and culture. Has written 19 books so far.  They include a novel, a poetry collection, a long poem, a short story collection and two books of parables. 
They also include books, which are compilations of his talks on All India Radio.  He is now writing a novel. His English books include translations of his long poem and a book of parables.

  1. New parables
  2. Canal Fish
  3. Ripples
  4. Sprinkle on the Face
  5. Steps to Super Students

 

K.S. Vijay Elangovan is a poet, writer and translator. He has written and translated nine books so far, which include

  1. Moments and memories
  2. The new Wrecking Ball
  3. The Fifth Way
  4. Adhiyas: Renaissance of a people

Translation of Prof. M.S. Swaminathan’s famous lecture in Budapest.

He is now working on a novel and a book of poems. He is currently working with The Hindu.

 
Incredible India


Get the Flash Player to see this player.

time2online Extensions: Simple Video Flash Player Module
Who's Online
We have 33 guests online

Iraianbu © 2011

All Rights Reserved
Webdesign

Purple Rain Media Solutions