குட்டி கதைகள்

கொடுப்பதும் எடுப்பதும்

 

அவருக்கு மிகவும் இரக்க சுபாவம்.

தன்னிடமிருப்பதை யெல்லாம் பிறருக்கு வாரி வழங்குவதில் ஒரு திருப்தி,

கேட்டால்தான் தர வேண்டுமா? கேட்காமலே தருவதுதானே ஈகை என நினைத்தார்.

விதவிதமான பழங்களை வாங்கி வைத்துக் கொண்டு கடைவீதியில் அமர்ந்தார்.

‘பழம் வேண்டுபவர்கள் வாருங்கள். இலவசமாய்ப் பெற்றுக் கொள்ளுங்கள்’ என்று சத்தம் போட்டுக் கூப்பிட்டார்.

ஆனால்; ஒருவர் கூட வரவில்லை. ‘இதில் ஏதேனும் சூழ்ச்சி இருக்குமோ’ என்றும் ‘இலவசமாய் யாராவது பழம் தருவார்களா’ - பழம் விற்கிற விலையில் என்றும் ‘சுவையிருக்காதோ’ என்றும் விஷப்பழமோ என்றும் கூடிக்கூடிப் பேசி விலகிச் சென்றனர்.

மாலையில் பழங்களைத் தூக்கி எறிந்துவிட்டு வந்தார். பலரும் பொறுக்கிக் கொண்டனர்.

 

படைப்பு

 

அவர் ஒரு குயவர். அழகழகாய் மண் பாத்திரங்கள் செய்து அடுக்கி வைத்திருந்தார்.

அந்த வழியே சென்ற மற்றொருவர், “இந்த ஆட்டை ஏன் கட்டி வைத்திருக்கிறீர்கள்” என்று குயவரிடம் கேட்டார்.

“நான் கடவுளை மகிழ்விக்க இதை பலிதரப் போகிறேன்” என்றார்.

“அப்படியா” எனக் கேட்டுவிட்டு அங்கிருந்த அழகிய பானைகளை யெல்லாம் ஒவ்வொன்றாய்ப் போட்டு உடைக்க ஆரம்பித்தார்.

பதறி போய் ஓடிவந்த குயவர் இரைந்து கத்தினார்.

அதற்கு “உனக்கு சந்தோஷமாக இருக்குமே என நினைத்தேன்” என்றார் வந்தவர்.

“நான் செய்த பானைகளை என் முன்னால் போட்டு உடைத்தால் எனக்குச் சந்தோஷம் வருமா?” என்றார் கோபமாக.

“நீ மட்டும் இறைவனின் படைப்பை அவர் முன்னால் கொன்றால் அவருக்கு மகிழ்ச்சி கிடைக்கும் என நினைக்கிறாயே!”

குயவருக்கு புரிந்தது.

 
Incredible India


Get the Flash Player to see this player.

time2online Extensions: Simple Video Flash Player Module
Who's Online
We have 82 guests online

Iraianbu © 2011

All Rights Reserved




Webdesign

Purple Rain Media Solutions